முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அச்சமில்லை, அச்சமில்லை!

  Photo by  Benjamin Davies  on  Unsplash 'அச்சமே மரணம்' என்பார் விவேகானந்தர்.  'அச்சமில்லை, அச்சமில்லை' என்று முழங்கினார் பாரதி.  அச்சமே கீழ்களது ஆசாரம் என்று குறள் கூறும்.  அஞ்சி அஞ்சிச் சாவார். இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே! என்று மனம் நொந்தான் பாரதி. அச்சம் எனப்படும் இந்த பயம் என்ற உணர்வு எல்லோரிடமும் உள்ளது. நாமாக விரும்பி ஏற்பதல்ல இது. சிறுவயது முதலே பெற்றோராலும், மற்றோராலும் நமக்குக் கற்பிக்கப்படுவது. பயம் என்பது சிறிது நேரத்தில் நடக்கவிருக்கும் ஏதாவது ஒரு விஷயத்திற்கான ஒரு உடனடி சலனம். அச்சத்தை வெளிப்படுத்தும் ஒரு உணர்ச்சி வயப்பட்ட வெளிப்பாடு ஆகும். இது தப்பித்தல் அல்லது எதிர்த்தல் போன்ற நடத்தைகளை ஒத்துள்ளது. பயத்தின் மூலகாரணம் அறியாமையே. கருக்கிருட்டில் காலில் இடறியது கயிறா அல்லது பாம்பா என்று தெரியாமல் பாம்பாக இருக்குமோ என்று ஐயம் வந்தவுடன் பயம் மனதில் அப்பிக்கொள்கிறது. கடி, விஷம், வாயில் நுரை தள்ளல், மரணம் என்று அடுக்கடுக்காக கற்பனை விரிந்து நம்மை செயலிழக்க வைக்கிறது. ஆனால் காலில் இடறியது பாம்பல்ல, கயிறுதான் என்ற உண்மையை வெளிச்சத்தில் பார்...