தொடரும் பயணம் எரிந்த நட்சத்திரங்கள் மீட்சி ------------------- சுமந்த வயிறு சேகரித்த நினைவுகள் முதுமை ------------------- சுலபத்தவனை வீடு தனித் தனி உலகம் சிறை ------------------- புதிதாய் வாங்கிய பொறி தீண்டப் படாத வடை வலி ------------------- பேரப் பிள்ளைகள் மல்லுக் கட்டு தொடர்வண்டி வழியனுப்பு வெறுமை ------------------- நீலவான் தோட்டத்தின் பூத்திருக்கும் மஞ்சள் நெருஞ்சிப் பூ ------------------- வீட்டில் உள்ளவர்களை தீவுகளாக்கியது முகநூல் ------------------- விடாது கூவுவோம் தேவை நாற்காலிகள் ------------------- இருளும் உணர்வும் இணைந்து பெற்றது மழலை ------------------- - ச. வெங்கடேஷ் எனது வேறு பல கவிதைகளைப் படிக்க கீழ்கண்ட முகநூல்களை வாங்கித் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
Poems in Tamil from Writers at MagicAuthor.com