Image by David MAITRE from Pixabay
புகை கக்கிய காரிலிருந்து
இறங்கி ஓரமாய் நின்று
இன்ஜின் வெண்புகையாய்
இரண்டு இழுப்பு இழுத்தார்.
பயன்பட்ட பின் குப்பையில்
எறியப்படும் பாலித்தீன் டம்ளரில்
தேநீரை உறிஞ்சி இதழ் துடைத்தார்.
உடல் சிலிர்க்க சர சரக்கும்
பிளாஸ்டிக் இருக்கைகளில்
கைபேசி சகிதமாய் வளவளக்கும்
கூட்டத்தில் சுற்றுச் சூழல் அவசியம்
குறித்து ஒலிவாங்கி தனை பிடித்து
உரக்க முழக்கமிட்டார் !
- ச. வெங்கடேஷ்
எனது வேறு பல கவிதைகளைப் படிக்க கீழ்கண்ட முகநூல்களை வாங்கித் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக