முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

திரையிடை துயில் உயிர்...

  திரைகளற்ற   சமவெளிக்   கடல்   ௭மக்கு   போர்க்களமல்ல   போ   வழியற்ற   நிலையில்   ௭ம்   சார்பு   வயல்   களம்   போல்   கயல்   வளம் !   நீர்   மேல்   ௭ல்கைகள்   வரையும்   திறம்   ௨மக்கு   ௮டிநீரில்   ஊடறுக்கும்   மீன்களை ௭ன்   செய்வாய் ?   விசைகள்   ஒடுக்கப்பட்ட   படகு மூழ்கடிக்கப்பட்டது   இங்கே   தான்   தோட்டாக்கள்   தாங்கிய   மார்புக்கூடு விம்மி   விடைசொன்னதும்   இங்கே   தான்   ௮மிழ்ந்த   ௨டல்   மீன்களின்   ௨ணவாகிப்   பின்   கண்களற்று   கரை   தட்டிற்று   வலையில்   சிக்கிய   மீன்களின்   பெருக்கம்   எம்மக்களின்   சதைப்பிண்டத்தில்   சமைந்தது   எப்படித்தான்   ருசிக்கிறதோ   ௮ரசியல்வாதிகள்   நாக்கில் ?  

சூ..சூ..மாரி

  #நெட்ட   நெடும்   பாதையிலே   ஒத்த   சோடி   பன   போலே   விரிஞ்ச   இந்த   ஒலகத்திலே -   ௭ம்   மனசு   அண்டிக்   கிடக்குதய்யா   #பன   ஒசர   மனசுக்குள்ளே   ௭ம்   முகமும்   பதிஞ்சிருந்த தடம்   ஒண்ணே   போதுமய்யா -   இப்   பாவி   ௨சுரு   வாழுமய்யா   #கரிசமண்ணு   ஆட்டம்   போலே   காத்தில்   கரஞ்ச   பாட்டும்   போலே பள்ளிக்கால   நெனப்பு   ஒண்ணே -   ராசு என்   ஆயுசுக்கும்   போதுமய்யா   #கந்தக   பூமி   மண்போலே   எரிஞ்சு   கிடக்க   வாழ்க்கையிலே   சொம்புத்   தண்ணி   குளிரய்யா -   ஒந்   நெனப்பு   எனக்கு   வாரயிலே   #பந்தம்   காத்து   வாழ்ந்திருப்போம் ,   நெஞ்சம்   கனத்து   போகையிலும் ;   எதிர்   முகம்   காணயிலே -   இன்னும்   பூக்குதய்யா   பூ   ஒண்ணு .