Image by analogicus from Pixabay "கஞ்ச பாளையம் ரயில் கேட் கிட்ட பொணம் ஒன்னு கிடக்காம் ." யாரு? "தெரியலே. வயசான பெருசாம் ." முத்துவுக்கு வயிற்றில் ஐஸ்கத்தி செருகினாப் போல். காரமாய் அமிலம் சுரந்தது. உடனே கழிப்பறைக்குப் போக வேண்டும் போல் சங்கடம். அரக்கு சிவப்பாய் உறைந்தோடிய இரத்தம். நசுங்கிய தலை. விழிகள் நிலைகுத்தியபடி 'இப்ப என்னடா செய்வ' என்று கேட்டது. சிதறிய முண்டம் முட் செடியில் சுருணை போல் தொங்கிக் கிடந்தது. கற்பனை அவனை மிகவும் இம்சித்தது. கடவுளே! அவராக இருக்க கூடாது. "முருகா முருகா". உதடுகள் நடுங்கின. தனது மொபட்டை உதைத்து முறுக்கினான். காலையில் பல் துலக்கும் போதே அப்பாவின் செருப்பு இருக்குமிடம் வெறுமையாக கிடந்ததை கவனித்தான். வாக்கிங் போயிருப்பாரோ? திரும்பும் போது மாரி முத்து டீ கடையில் புகைத்தபடி தினத்தந்தி படித்து விட்டு ஏழரைக்கெல்லாம் வந்துடுவாரே. என்ன ஆச்சு ? "அப்பா எங்கே? உங்ககிட்ட ஏதாச்சும் சொன்னாரா ?" "நானென்ன கண்டேன் , நேத்திலிருந்து கோவமாத் தான் இருக்காரு, சரியா சோறு தின்னறதில்ல. என்ன எழவோ." சிவகாமிக்கு விவரம் பத...
Poems in Tamil from Writers at MagicAuthor.com