முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீ ஒரு நெருப்புப் பறவை

  ஏனோ ஒரு நெருப்பு பந்தாய் கனக்கிறது அவளின் இதயம் ஒரு முற்செடியில் குத்தி கிழிக்கப் பட்ட பறவையின் உடலைப்போல சிதறி கிடக்கிறாள் தரையில் பாரதி கண்ட பதுமை பெண்தான் அவள் ஆனாலும் நாற்காலிகள் பிடுங்க ப்படுகின்றன அவளிடமிருந்து பூமியில் விழுந்தால் நீ விதையென்று பூமிக்குத் தெரியும் ஏனெனில் உனக்கு மட்டுமே இந்த பூமி சொந்தம் என்பதும் உனக்கும் தெரியும் பற்றிக்கொள் கற்றுக்கொள் கடமை ஆற்று வீராங்கனையின் வாளைப் போல வீழ்வது அவர்களாகக் கூட இருக்கலாம் இருந்தாலும் சற்றே படித்து வை பாரதியின் அக்னிக் குஞ்சினை அன்புடன் செநா .....

காதலின் ரகசியம்

  நீ இல்லாமல் நொடி பொழுதில் உயிர் விடுவேன் கண்ணே எனக்கு முன்பே நீ பிறந்து விட்டாலும் நீ இல்லையெனில் நான் இல்லை திருமண வயதை கடந்தாலும் உன் கடைக்கண் பார்வையில் ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நீ எல்லோரிடமும் பேசி வருவதால் கோபத்தில் கூட மறக்க நினைக்கிறேன் முடியவில்லை என் மீது உனக்கு காதல் இல்லையென்றாலும் என் சுவாச பையில் சிம்மாசனம் இட்டு சிரிக்கின்றாய் பூமி பந்தில் சில சமயம் புயலாக வருகிறாய் சில சமயங்களில் தென்றலாக வருடிச் செல்கிறாய் என்னில் புரியாத பதிராய் புன்னகை செய்கின்றாய் எல்லோரையும் காதலிக்கும் கலையை எங்கே கற்றுக் கொண்டாய் காற்றே ரகசியம் சொல்லிவிட்டு செல்வாயோ என் காதுகளில் அன்புடன் செநா .....