ஏனோ ஒரு நெருப்பு
பந்தாய் கனக்கிறது
அவளின் இதயம்
ஒரு முற்செடியில்
குத்தி கிழிக்கப் பட்ட
பறவையின் உடலைப்போல
சிதறி கிடக்கிறாள்
தரையில்
பாரதி கண்ட
பதுமை பெண்தான்
அவள்
ஆனாலும்
நாற்காலிகள்
பிடுங்கப்படுகின்றன
அவளிடமிருந்து
பூமியில் விழுந்தால்
நீ விதையென்று
பூமிக்குத் தெரியும்
ஏனெனில்
உனக்கு மட்டுமே
இந்த பூமி
சொந்தம் என்பதும்
உனக்கும் தெரியும்
பற்றிக்கொள்
கற்றுக்கொள்
கடமை ஆற்று
வீராங்கனையின்
வாளைப் போல
வீழ்வது
அவர்களாகக் கூட
இருக்கலாம்
இருந்தாலும்
சற்றே படித்து வை
பாரதியின்
அக்னிக் குஞ்சினை
அன்புடன்
செநா .....
கருத்துகள்
கருத்துரையிடுக