நீ இல்லாமல்
நொடி பொழுதில்
உயிர் விடுவேன் கண்ணே
எனக்கு முன்பே
நீ பிறந்து விட்டாலும்
நீ இல்லையெனில்
நான் இல்லை
திருமண வயதை கடந்தாலும்
உன் கடைக்கண் பார்வையில்
ஏதோ வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்
நீ எல்லோரிடமும்
பேசி வருவதால்
கோபத்தில் கூட
மறக்க நினைக்கிறேன்
முடியவில்லை
என் மீது உனக்கு
காதல் இல்லையென்றாலும்
என் சுவாச பையில்
சிம்மாசனம் இட்டு
சிரிக்கின்றாய்
பூமி பந்தில்
சில சமயம் புயலாக
வருகிறாய்
சில சமயங்களில்
தென்றலாக
வருடிச் செல்கிறாய்
என்னில்
புரியாத பதிராய்
புன்னகை செய்கின்றாய்
எல்லோரையும்
காதலிக்கும் கலையை
எங்கே
கற்றுக் கொண்டாய்
காற்றே
ரகசியம் சொல்லிவிட்டு
செல்வாயோ
என் காதுகளில்
அன்புடன்
செநா .....
கருத்துகள்
கருத்துரையிடுக