முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தமிழ் ஹைக்கூ கவிதைகள்

  தொடரும் பயணம் எரிந்த நட்சத்திரங்கள் மீட்சி  ------------------- சுமந்த வயிறு சேகரித்த நினைவுகள் முதுமை  ------------------- சுலபத்தவனை வீடு தனித் தனி உலகம்  சிறை  ------------------- புதிதாய் வாங்கிய பொறி தீண்டப் படாத வடை வலி  ------------------- பேரப் பிள்ளைகள் மல்லுக் கட்டு தொடர்வண்டி வழியனுப்பு வெறுமை  ------------------- நீலவான் தோட்டத்தின் பூத்திருக்கும் மஞ்சள் நெருஞ்சிப்  பூ  ------------------- வீட்டில் உள்ளவர்களை தீவுகளாக்கியது முகநூல் ------------------- விடாது கூவுவோம் தேவை நாற்காலிகள்  ------------------- இருளும் உணர்வும் இணைந்து பெற்றது மழலை  ------------------- - ச. வெங்கடேஷ்  எனது வேறு பல கவிதைகளைப் படிக்க கீழ்கண்ட முகநூல்களை வாங்கித் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

நடப்பு

  Image by  David MAITRE  from  Pixabay புகை கக்கிய காரிலிருந்து இறங்கி ஓரமாய் நின்று இன்ஜின் வெண்புகையாய் இரண்டு இழுப்பு இழுத்தார். பயன்பட்ட பின் குப்பையில் எறியப்படும் பாலித்தீன் டம்ளரில் தேநீரை உறிஞ்சி இதழ் துடைத்தார். உடல் சிலிர்க்க சர சரக்கும் பிளாஸ்டிக் இருக்கைகளில் கைபேசி சகிதமாய் வளவளக்கும் கூட்டத்தில் சுற்றுச் சூழல் அவசியம் குறித்து ஒலிவாங்கி தனை பிடித்து உரக்க முழக்கமிட்டார் ! - ச. வெங்கடேஷ்   எனது வேறு பல கவிதைகளைப் படிக்க கீழ்கண்ட முகநூல்களை வாங்கித் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

திறமை தான் நமக்கு செல்வம்

  Image by  LuAnn Hunt  from  Pixabay உழைப்பவனுக்கு ஒரு காசு, மேய்ப்பவனுக்கு ஒன்பது காசு என்பார்கள். செங்கல் அடுக்கி சிமெண்ட் பூசும் மேஸ்திரிக்கு சம்பளம் நானூறு; ஆனால் அவரை வேலை வாங்கும் பொறியாளர் பெறுவது நான்காயிரம். ஏன் இந்த வேறுபாடு? முன்னவர் சொன்னதை மட்டும் செய்யக்கூடியவர். அதற்கு மேல் ஒரு படி கூட சுயமாக செய்யத் தெரியாது. பின்னவர் எதையும் ஏன் செய்ய வேண்டும், எப்படி, எப்பொழுது செய்ய வேண்டும் என்றெல்லாம் முன் கூட்டியே நன்கு திட்டமிட்டு, அதனை பிறரை கொண்டு வெற்றிகரமாக செய்து முடிப்பவர். அதாவது பொறுப்பும் , திறமையும் மிக்கவர். ஒரு பணக்காரருக்கு இரண்டு வேலைக்காரர்கள். அவர்களில் ஒருவனுக்கு மட்டும் அதிக சம்பளம் கொடுத்து வந்தது பற்றி மற்ற வேலைக்காரன் பெரிதும் குறை பட்டுக் கொண்டான். பணக்காரன் அவனை அழைத்து வீட்டின் வெளியே சென்று எவராவது இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு வா என்றார். அவனும் வேகமாக ஓடி சென்று பார்த்து விட்டு "ஆம் ஐயா, தெரு முனையில் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார்". என்றான். இப்பொழுது அந்த பணக்காரர் அடுத்தவனை வெளியே அனுப்பினார். வந்தவன் தெரு முனையில் நின்று க...

அச்சமில்லை, அச்சமில்லை!

  Photo by  Benjamin Davies  on  Unsplash 'அச்சமே மரணம்' என்பார் விவேகானந்தர்.  'அச்சமில்லை, அச்சமில்லை' என்று முழங்கினார் பாரதி.  அச்சமே கீழ்களது ஆசாரம் என்று குறள் கூறும்.  அஞ்சி அஞ்சிச் சாவார். இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே! என்று மனம் நொந்தான் பாரதி. அச்சம் எனப்படும் இந்த பயம் என்ற உணர்வு எல்லோரிடமும் உள்ளது. நாமாக விரும்பி ஏற்பதல்ல இது. சிறுவயது முதலே பெற்றோராலும், மற்றோராலும் நமக்குக் கற்பிக்கப்படுவது. பயம் என்பது சிறிது நேரத்தில் நடக்கவிருக்கும் ஏதாவது ஒரு விஷயத்திற்கான ஒரு உடனடி சலனம். அச்சத்தை வெளிப்படுத்தும் ஒரு உணர்ச்சி வயப்பட்ட வெளிப்பாடு ஆகும். இது தப்பித்தல் அல்லது எதிர்த்தல் போன்ற நடத்தைகளை ஒத்துள்ளது. பயத்தின் மூலகாரணம் அறியாமையே. கருக்கிருட்டில் காலில் இடறியது கயிறா அல்லது பாம்பா என்று தெரியாமல் பாம்பாக இருக்குமோ என்று ஐயம் வந்தவுடன் பயம் மனதில் அப்பிக்கொள்கிறது. கடி, விஷம், வாயில் நுரை தள்ளல், மரணம் என்று அடுக்கடுக்காக கற்பனை விரிந்து நம்மை செயலிழக்க வைக்கிறது. ஆனால் காலில் இடறியது பாம்பல்ல, கயிறுதான் என்ற உண்மையை வெளிச்சத்தில் பார்...

திரையிடை துயில் உயிர்...

  திரைகளற்ற   சமவெளிக்   கடல்   ௭மக்கு   போர்க்களமல்ல   போ   வழியற்ற   நிலையில்   ௭ம்   சார்பு   வயல்   களம்   போல்   கயல்   வளம் !   நீர்   மேல்   ௭ல்கைகள்   வரையும்   திறம்   ௨மக்கு   ௮டிநீரில்   ஊடறுக்கும்   மீன்களை ௭ன்   செய்வாய் ?   விசைகள்   ஒடுக்கப்பட்ட   படகு மூழ்கடிக்கப்பட்டது   இங்கே   தான்   தோட்டாக்கள்   தாங்கிய   மார்புக்கூடு விம்மி   விடைசொன்னதும்   இங்கே   தான்   ௮மிழ்ந்த   ௨டல்   மீன்களின்   ௨ணவாகிப்   பின்   கண்களற்று   கரை   தட்டிற்று   வலையில்   சிக்கிய   மீன்களின்   பெருக்கம்   எம்மக்களின்   சதைப்பிண்டத்தில்   சமைந்தது   எப்படித்தான்   ருசிக்கிறதோ   ௮ரசியல்வாதிகள்   நாக்கில் ?