Image by Mahinthan So - சொந்த முயற்சி வடிவு வீங்கிய வயிற்றை செல்லமாக தடவியபடியே சிவன் கோவில் தேர் போல் அசைந்தாடி சுப்புணியிடம் வந்து , "அப்பா" என்றாள். அவள் மிகவும் களைத்திருந்தாள். பேசும் போதே மூச்சு வாங்கியது. நிறை சூலி. இரண்டு நாட்களில் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு சேர்த்தாகணும். பிரசவம் இலவசம் என்றாலும் ஆட்டோ, டிப்ஸ், டீத் தண்ணி என்று சில ஆயிரமாவது தேவைப்படுமே. "கவலைப்படாதே, வடிவு. முதலாளி சம்பள முன் பணமா இரண்டாயிரம் தரேன்னு சொல்லிட்டாரு. எல்லாம் அப்பன் சிவன் அருளாலே நல்லா நடக்கும்." "அதுக்கில்லப்பா, உங்களுக்கும் வயசாகிட்டு வருது. முன்ன மாதிரி இல்ல. இந்த வருஷமும் தேர் வேலைக்கு போகத்தான் வேண்டுமா? வேண்டாம்பா. மனசே சரியில்லை. பயமாயிருக்குப்பா." என்றாள் கலங்கியபடி. "அசட்டுப் பெண்னே, தைரியமா இருக்கணும். எத்தனை வருஷமா அப்பனுக்கு சேவை செய்த கட்டையிது. அவனருளால் ஒரு குறையும் வராது. முத்து போல் ஒரு பேரனை பெற்றுக் கொடுக்கப்போற" என்றான் சுப்புணி சிரித்தபடி. திருநாள் வந்தது. தேர் வந்தது. ஊர்வலம் போகின்ற நாளும் வந்தது. கொள்ளை அழகுடன் சிவன் தேர் ...
கருத்துகள்
கருத்துரையிடுக