மீண்டும் ௭ன் இதயக் கதவுகளைத் திறந்திட்டாய்-௮து
யாண்டும் உன் குடிலென புகுந்திட்டாய்
நினைவருகில், யாக்கைத் தொலைவில்- ௭ங்கிருப்பினும்
என் இதயக் காவலில் தினமும் மீள்கிறாய்
உறவியாய் நினைவுகளில் நீங்காது நீள்கிறாய்
தீண்டிச் சென்றதோ காதல் ஒருமுறை- தடை
தாண்டி வளர்கிறது நம் சாதல் வரை
நான் பாசமுற்ற கணங்களோ காதலென்பது- நீ
நேசமேற்ற நொடிகளில் ௭ன் வாழ்வு தொடங்கிற்று
உள்ளாறா வாழ்வின் ஏக்கக் கணங்களில் தினமும் மீள்கிறாய்
உறவியாய் நினைவுகளில் நீங்காது நீள்கிறாய்
இச்சையுற்று இன்பத்தில் துயில்வாயே மஞ்சம்- எனில்
அச்சமுற்று துன்பம் பயிலுமோ நெஞ்சம்?
எனக்குள் உனை ஊற்றிய இப்பிறவியில் மேவியே
நம் இடையிலா நெருக்கத்தில் முகிழ்க்குமென் ஆவியே
௨ருவிலா ௨ணர்வுகளின் முடிவிலா நீட்சிமைகளுள்
என் தீராக்காதலின் இருதயக் கதவுகளில்,
தினமும் மீள்கிறாய்...
உறவியாய் என் நினைவுகளில் நீங்காது நீள்கிறாய்.
கருத்துகள்
கருத்துரையிடுக